பூங்காவில் இளம்பெண்களை கட்டிப்பிடித்து பாலியல் சில்மிஷம்.. கனடாவில் இந்திய வாலிபர் கைது
கனடாவில் பூங்காவுக்கு வரும் சிறுமிகள், இளம்பெண்கள் என பலரை கட்டிப்பிடித்து பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு இந்தியரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கனடாவின் நியூ பிரன்ஸ்விக் மாகாணத்தில் மான்க்டன் நகரில் நீர் பூங்கா ஒன்று அமைந்துள்ளது. இந்த பூங்காவில், 25 வயது இந்திய வாலிபர் ஒருவர் சுற்றி திரிந்துள்ளார். அவர் பூங்காவுக்கு வரும் சிறுமிகள், இளம்பெண்கள் என பலரை கட்டிப்பிடித்து பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு இருக்கிறார். இதுகுறித்து 12 பேர் போலீசில் புகாராக கூறியுள்ளனர்.
இதனை தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் சம்பவ பகுதியில் வைத்து அந்நபரை கைது செய்தனர். இந்த வழக்கு வருகிற அக்டோபர் 24-ம் தேதி மான்க்டன் மாகாண நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. இந்த காலகட்டத்தில், பெற்றோர் அவர்களுடைய மகள்களிடம் பேசும்படி போலீசார் கேட்டு கொண்டுள்ளனர்.
இதில், பாலியல் துன்புறுத்தலில் பாதிக்கப்பட்ட நபராக இருப்பவர்கள் ராயல் கனடா போலீசாரை தொடர்பு கொள்ளும்படி கேட்டு கொள்ளப்பட்டு உள்ளனர். அந்நபரின் அடையாளங்களை போலீசார் வெளியிடவில்லை.
எனினும், பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் அந்த நபரின் புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் வெளியிட்டு உள்ளார். மற்ற பெற்றோர்களையும் எச்சரித்து உள்ளார். அந்நபர் வேறு சில இந்திய வாலிபர்களுடன் ஒரு குழுவாக சுற்றி திரிய கூடும் என சந்தேகமும் தெரிவித்து உள்ளார்.