பிறப்புறுப்பு உட்பட உடல் முழுவதும் டாட்டூ.. கின்னஸ் சாதனை படைத்த அமெரிக்க பெண்!

 

அமெரிக்க பெண் ஒருவர் அதிக எண்ணிக்கையில் டாட்டூ குத்தி கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.

உலகில் சில மனிதர்கள் வித்தியாசமாக தோற்றமளிக்க தலை, உதடு, மூக்கு, காது, முடி, விரம், நகம் உள்ளிட்டவற்றால் மற்றவர்களிடம் வித்தயாசம் காட்டிக்கொள்வார். அந்த வகையில், அமெரிக்க பெண் ஒருவர் அதிக எண்ணிக்கையில் பச்சை குத்தி கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.

அவரது உடலில் 99.98 சதவீதம் அவரது பச்சை குத்தல்களால் நிரம்பியுள்ளது. கைகள் மற்றும் கால்கள், உச்சந்தலை, நாக்கு, ஈறுகள், கண் இமைகளின் வெள்ளை வெளிப்புற அடுக்கு மற்றும் பிறப்புறுப்புகள் உட்பட உடலின் எந்த பாகத்தையும் அவர் விட்டுவைக்கவில்லை.

36 வயதாகும் இப்பெண்ணின் பெயர் எஸ்பெரன்ஸ் லுமினெஸ்கா ஃபியூயர்ஜினா. பிரிட்ஜ்போர்ட்டைச் சேர்ந்த இவர் முன்னாள் ராணுவ ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘இருளை அழகுபடுத்துதல்’ என்ற கருப்பொருளுடன் தனது உடலை ஓவியம் போல மாற்றியமைத்துள்ளார். 

allowfullscreen

கின்னஸ் சாதனை படைத்தவர்களைப் பாராட்டி வளர்ந்த அவர், சாதனை படைத்ததற்கு நன்றி தெரிவித்தார். பெண்களின் ஆற்றல் திறன்களை வெளிப்படுத்த பச்சை குத்தும் சாதனையுடன் முயற்சித்ததாக அவர் கூறினார்.