உலக முதலீட்டாளர் மன்ற மாநாட்டில் தமிழ்நாட்டிற்கு விருது!

 

அபுதாபியில் நடைபெற்ற 8வது உலக முதலீட்டாளர் மன்ற மாநாட்டில் தமிழ்நாட்டிற்கு விருது கிடைத்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் 8-வது உலக முதலீட்டாளர் மன்ற மாநாடு நடைபெற்றது. கடந்த 16-ம் தேதி தொடங்கிய இந்த மாநாட்டில், தமிழ்நாடு அரசின் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறையின் கீழ் செயல்படும் வழிகாட்டு நிறுவனத்திற்கு, முதலீடு ஊக்குவிப்பிற்கான ஐக்கிய நாடுகளின் விருது வழங்கப்பட்டது.

ஆற்றல் மாற்றத்தை ஊக்குவிக்கவும், பன்னாட்டு முதலீடுகளை ஈர்க்கவும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் புதுமையான முயற்சிகள் மற்றும் அணுகுமுறைகளுக்கு கிடைத்த இந்த விருது, ஐக்கிய நாடுகளின் அங்கீகாரமாக கருதப்படுகிறது.