ஸ்வீடனில் 50 ஆண்டுகளில் இல்லாத கனமழை.. தடம் புரண்டு ரயில் விபத்து!

 

ஸ்வீடனில் பெய்த கனமழையால் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்வீடன் நாட்டின் கிழக்குப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஆற்றங்கரை மற்றும் மலைச்சரிவான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளளனர். அந்த நாட்டில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை பெய்து வருவதாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் அண்டை நாடான நார்வேயிலும் பெய்த கனமழையால் பெரும்பாலான பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இரு நாடுகளிலும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக மழை பெய்வதாகக் கூறப்படும் நிலையில் நார்வேயில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை பெய்து வருகிறது.