துப்பாக்கியால் மாணவன் சுட்டதில் ஆசிரியர் மரணம்! அமெரிக்காவில் கொடூரம்!!

 

அமெரிக்காவில் பள்ளிகள், கல்லூரிகள், மால்கள் என துப்பாக்கிச்சூட் நடைபெறாத இடங்கள் இல்லை என்ற அளவுக்கு அடிக்கடி நடக்கும் நிகழ்வுகளாக மாறி விட்டது.

விஸ்கான்சின் மாநிலம் மடிசன் நகரில் உள்ள அபண்டண்ட் லைஃப் கிறித்துவப் பள்ளியில் பள்ளி மாணவன் ஒருவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஆசிரியர் மற்றும் மாணவர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் 6 பேர் படுகாயம் அடைத்துள்ளனர்.

துப்பாக்கிச்சூடு நடத்திய மாணவனுக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது