பெரு நாட்டில் பெரும் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 7.2 என பதிவு.. சுனாமி எச்சரிக்கை!

 

பெரு நாட்டில் ரிக்டர் அளவுகோலில் 7.2 என்ற அளவில் மிகப் பெரிய நிலநடுக்கம் இன்று ஏற்பட்டது.

தென் அமெரிக்க நாடான பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டரில் இந்த நிலநடுக்கம் 7.2 ஆக பதிவாகி இருக்கிறது. நிலநடுக்கம் காரணமாக அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக அமெரிக்கப் புவியியல் நிலஅதிர்வு மையம் வெளியிட்ட தகவலில், பெருவின் தெற்கு கடற்கரையில் ஏற்பட்ட நிலநடுக்கமானது நள்ளிரவு 12.36 மணிக்கு ரிக்டர் அளவில் 7.2 அலகுகளாகப் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. 

இந்த நிலநடுக்கத்தின் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். மேலும் நிலநடுக்கதின்போது பதிவான சிசிடிவி காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.