உடல்நலம் குன்றிய உரிமையாளர்.. ஆம்புலன்ஸை விடாமல் துரத்தி சென்ற நாய்.. வைரலாகும் வீடியோ!
கொலம்பியாவில் உடல்நலம் குன்றிய உரிமையாளரை ஏற்றி செல்லும் ஆம்புலன்ஸைத் துரத்தி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் துன்ஜாவில் நடந்த இந்த சம்பவத்தில், டோனோ என்ற நாய், தனது உடல்நலம் குன்றிய உரிமையாளர் அலெஜாண்ட்ரோவை ஏற்றி செல்லும் ஆம்புலன்ஸைத் துரத்தி சென்றது. உரிமையாளர் அலெஜாண்ட்ரோவுக்கு ஏற்பட்ட திடீர் உடல்நல குறைவு அவரை மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலைக்கு தள்ளியது, இந்த இக்கட்டான நிலையிலும், நாய் டோனோ தனது உரிமையாளரை விட்டு விலக மறுத்தது.
நாய் டோனோவின் இந்த துரத்தலை அப்பகுதி வழியாக சென்ற மோட்டார் சைக்கிள் ஓட்டி சென்ற ஒருவர் கவனித்து அதனை கேமராவில் படம் பிடித்தார். அத்துடன் அதனை ஆம்புலன்ஸ் குழுவினருக்கும் அறிவித்தார். இதையடுத்து நாயின் விசுவாசத்தை உணர்ந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அலெஜாண்ட்ரோவுடன் டோனோவையும் அழைத்து சென்றனர்.