வானில் இருந்து மழையாக பொழிந்த ரூ.10 லட்சம்.. பணத்தை எடுக்க போட்டி போட்ட மக்கள்.. வைரல் வீடியோ!

 

செக் குடியரசு நாட்டில் நடிகர் ஒருவர் ஹெலிகாப்டரில் இருந்து அமெரிக்க டாலர்களை வீசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மத்திய ஐரோப்பாவில் உள்ள செக் குடியரசு நாட்டைச் சேர்ந்தவர் கமில் பார்டோசெக். திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான இவர் வானில் இருந்து பணத்தை வீசியுள்ளார்.

இவர், ஹெலிகாப்டரில் இருந்து ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை கீழே மக்களுக்கு வீசியுள்ளார். அப்போது, பணம் கொட்டும் இடங்களில் வந்து பொதுமக்கள் பலரும் தான் கொண்டு வந்திருந்த பைகளிலும், கைகளிலும் பணத்தை எடுத்துச் சென்றனர்.

உலகின் முதல் பண மழையின் வீடியோவை கமில் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நூற்றுக்கணக்கான மக்கள் பணத்தை எடுக்க போட்டி போடும் காட்சியை காணலாம்.

பார்டோசெக்கின் இந்த நிகழ்வு சில எதிர்வினைகளை சந்தித்துள்ளது. சிலர் அவரது தாராள மனப்பான்மையை பாராட்டி இருந்தாலும் பலர் அவரை பணத்தை வீணடிப்பதாகக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.