அமேசான் காட்டில் நொறுங்கி விழுந்த விமானம்.. 40 நாட்கள் உயிர் பிழைத்த 4 குழந்தைகள்.. கொலம்பியாவில் நடந்த அதிசயம்.!

 

கொலம்பியாவில் விமான விபத்து ஏற்பட்ட 40 நாட்களுக்கு பின் 11 மாத கைக்குழந்தையுடன் 3 குழந்தைகள் உயிருடன் மீண்ட அதிசயம் நடந்து உள்ளது.

தென் அமெரிக்காவின் அமேசான் ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள ஒரு மிகபெரிய மழைக்காடு அமேசான். இந்த காடு பிரேசில், கொலம்பியா, பெரு, வெனிசுலா, ஈக்வெடார், கயானா, பொலிவியா, சுரிநாம், பிரெஞ்சு கயானா உள்ளிட்ட நாடுகளில் பரந்து விரிந்துள்ளது. இந்த நிலையில், கொலம்பியா நாட்டின் அமேசான் வனப்பகுதியில் இருந்து தம்பதி தனது 4 குழந்தைகளுடன் விமானத்தில் சன் ஜொஷி டி கவ்ரி நகருக்கு கடந்த 1-ம் தேதி சென்றுள்ளனர். இதில், 11 மாதங்களேயான கைக்குழந்தையும் அடக்கம். 

அமேசான் அடவனப்பகுதியில் சென்றபோது விமானம் திடீரென விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானி, தம்பதி என 3 பேர் உயிரிழந்தனர். ஆனால் அதிஷ்டவமாக 13 வயது, 9 வயது, 4 வயது 11 மாத கைக்குழந்தை உள்பட 4 பேர் இந்த விபத்தில் உயிர் பிழைத்தனர். இவர்கள் அனைவரும் அர்ந்த வனப்பகுதிக்குள் சிக்கிக்கொண்டனர். 

அந்நாட்டு அரசு தகவல் அறிந்து 150 ராணுவ வீரர்கள், மோப்ப நாய்கள், பழங்குடி மக்கள் ஆகியோரை கொண்டு அடர்ந்த காட்டுப்பகுதியில் மாபெரும் தேடுதல் வேட்டையை நடத்தியது.  தேடுதல் வேட்டை நடைபெற்ற 2வது வாரத்தில் 3 பெரியவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. ஆனால், 4 குழந்தைகளை மட்டும் கண்டுபிடிக்க முடியவில்லை.

குழந்தைகளை தேடிய ராணுவம் ஹெலிகாப்டர் மூலம் கட்டுப்பகுதிக்குள் ஆங்காங்கே உணவு பொட்டலங்களை போட்டது. மேலும், அனைவரும் ஒரே இடத்தில் இருங்கள் என ஒலி பெருக்கி மூலம் தகவல்கள் தரப்பட்டன. இந்நிலையில், விபத்தில் குழந்தைகள் உயிர் பிழைத்திருப்பார்கள் என்ற அரசு மீட்பு குழுவினரின் நம்பிக்கை வீண் போகவில்லை.

விபத்து நிகழ்ந்து 40 நாள்கள் கழித்து அந்த 4 குழந்தைகளும் காட்டுப் பகுதியில் பத்திரமாக மீட்கப்பட்டன. இந்த அடர்ந்த காட்டுப்பகுதியில் இவர்கள் எப்படி 40 நாள்கள் உயிர்பிழைத்து வாழ்ந்தனர் என்று அனைவரும் ஆச்சரியப்படுகின்றனர். மீட்கப்பட்ட சிறுவர்களை ராணுவம் போகோடா பகுதிக்கு கொண்டு வந்து மருத்துவமனையில் அனுமதித்தனர். மாயமான குழந்தைகள் மீட்பு பணியை அந்நாட்டு அதிபர் கட்ஸ்சவ் பெட்ரோ தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வந்தார். குழந்தைகள் மீட்கப்பட்டதை கேள்விப்பட்டு மகிழ்ச்சி அடைந்த அவர் இது ஒரு மகத்தான போராட்டத்திற்கான அடையாளம், இவர்கள் வரலாற்றில் இடம் பிடித்துவிட்டார்கள் என்றார்.

இந்த குழந்தைகளின் குடும்பத்தார் Huitoto என்ற பழங்குடி வகையை சேர்ந்தவர்கள் என்பதால் இயல்பாகவே இவர்களுக்கு மழைக்காடுகளில் தப்பி வாழ்வது எப்படி எனத் தெரிந்துள்ளதாக மீட்பு பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவத்தை பலரும் நெகிழ்ச்சியுடன் ஆச்சரித்துடன் பாராட்டி வருகின்றனர்.