இலங்கைக்கு செல்ல இந்த நாட்டு மக்களுக்கு விசா தேவையில்லை.. இலங்கை அரசு அறிவிப்பு
இலங்கைக்கு வர 7 நாடுகளின் மக்களுக்கு மட்டும் இனிமேல் விசா தேவையில்லை என அந்நாடு அரசு அறிவித்துள்ளது.
விசா என்பது ஒரு சட்டப்பூர்வ ஆவணமாகும், இது தாங்குபவர் ஒரு வெளிநாட்டு நாட்டிற்கு சட்டப்பூர்வமாக நுழைவதற்கு உதவுகிறது. தாங்குபவரின் பாஸ்போர்ட் பொதுவாக முத்திரையிடப்பட்ட அல்லது விசாவுடன் ஒட்டப்பட்டிருக்கும். பலவிதமான விசாக்கள் உள்ளன, அவை ஒவ்வொன்றும் நாட்டில் வசிக்க, வேலை செய்ய, சுற்றுப்பயணம் செய்ய அல்லது படிக்கும் அனுமதியை வழங்குபவருக்கு வழங்குகிறது.
சில நாடுகளுக்கு செல்வதற்கு எளிதாக விசா பெற்றுவிடலாம். அந்த நாட்டுக்கு சென்ற பிறகு கூட அங்கு விசா பெற்றுக்கொள்ளலாம். அப்படி எளிமையான விசா அணுகுமுறைகளை கடைப்பிடிக்கும் நாடுகள் இருக்கின்றன. அதேவேளையில் கடுமையான விசா நடைமுறைகளைப் பின்பற்றும் சில நாடுகள் உள்ளன.
இந்நிலையில் இந்தியாவில் இருந்து இலங்கை செல்ல இனி விசா தேவை இல்லை என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்தியர்கள் இலங்கைக்கு விசா எடுக்காமல் சென்று வரலாம். மேலும் இந்தியா மட்டுமின்றி சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய 6 நாடுகளில் இருந்தும் இலங்கைக்கு செல்ல விசா தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதாகவும், இதனடிப்படையில் விசாவை இலவசமாக வழங்குவதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதனை உறுதி செய்யும் விதமாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.