ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம்.. உணவகத்தில் பணியாற்றும் வீராங்கனை.. வைரல் வீடியோ
பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் பெற்ற சீன வீராங்கனை, உணவகத்தில் உணவு பரிமாறும் காட்சிகள் வைரலாகி வருகிறது.
பாரீஸ் ஒலிம்பிக்கில் 2024 தொடர் சமீபத்தில் நிறைவுபெற்றது. இந்த போட்டிகளில் ஏராளமான சுவாரஸ்யங்கள், சர்ச்சைகள் அரங்கேறின. அந்த வகையில், ஜிம்னாஸ்டிக்ஸில் வெள்ளிப் பதக்கம் வென்ற சீன வீராங்கனை சோ யாக்கின் அப்பாவித்தனமான க்யூட் ரியாக்சன் கொடுத்து இணையத்தில் வைரல் ஆனார்.
18 வயதான சோ யாக்கின் சில வாரங்களுக்கு முன்பு ஒலிம்பிக் போடியத்தை அலங்கரித்த நிலையில், தற்போது நாடு திரும்பியுள்ளார். ஒலிம்பிக் போட்டி திருவிழா முடிந்த கையோடு சோ யாக்கின், தன் பெற்றோர் நடத்தும் உணவகத்தில் அவர்களுக்கு உதவ துவங்கியுள்ளார். தனது சொந்த ஊரிலேயே இயங்கி வரும் சிறிய உணவகத்தில் சோ யாக்கின், உணவு பரிமாறி வருகிறார்.
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற நிலையில், உணவகத்தில் சோ யாக்கின் உணவு பரிமாறும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
18 வயதில் கூட, சோ யாக்கின் ஏற்கனவே தனது ஜிம்னாஸ்டிக்ஸ் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க பதக்க எண்ணிக்கையைப் பெற்றுள்ளார். மூன்று வயதாக இருந்தபோது ஜிம்னாஸ்டிக்ஸைத் தொடங்கிய ஜாவ், பேலன்ஸ் பீம் பிரிவில் நிபுணத்துவம் பெற்றவர். 2020-ம் ஆண்டில், சீன சாம்பியன்ஷிப் போட்டிகளில் சமநிலைக் கற்றையில் தனிப்பட்ட தங்கம் வென்றார். சீனியர் லெவலில், பாரிஸில் நடந்த முதல் ஒலிம்பிக் பதக்கத்திற்கு முன்னதாக, சீன தேசிய விளையாட்டு மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் சோ தங்கம் வென்றுள்ளார்.