கொரியப் பெண்கள் மீது வெறி.. வேலை வாங்கி தருவதாக கூறி பாலியல் பலாத்காரம்... ஆஸ்திரேலிய பாஜக பிரமுகர் லீலை.!

 

ஆஸ்திரேலியாவில் பாஜகவைச் சேர்ந்த நபர் கொரிய பெண்களை பலாத்காரம் செய்த விவகாரத்தில் சிக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இந்திய சமூகத்தின் முக்கிய நபராக கருதப்படுபவர் பாலேஷ் தன்கர். பாஜகவை சேர்ந்த இவர், கொரிய நாட்டைச் சேர்ந்த பெண்களை குளிர்பானத்தில் போதைப்பொருள் கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவர்கள் அனைவரும் 20 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.

இதையடுத்து அந்த ஐந்து பெண்களும் மொழி பெயர்ப்பாளர் வேலைக்கு பொய்யாக தங்களை அழைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசில் புகார் அளித்துள்ளனர். கடந்த 2018-ம் ஆண்டு இந்தச் சம்பவம் நடந்துள்ளது. பாலேஷ் தன்கர் அந்த கொரிய நாட்டுப் பெண்களை சிட்னியில் உள்ள ஹில்டன் ஹோட்டலுக்கு வரவழைத்து, ரோஹிப்னால் (Rohypnol) என்னும் போதைப் பொருளை அவர்களின் குளிர்பானத்தில் கலந்து அவர்களை மயக்கமடையச் செய்துள்ளார். 

பின்னர் அவர்கள் மயங்கியதும் தனது குடியிருப்பிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். மேலும், அதனை தனது மொபைல் போனிலும் இரகசியமாக படம் பிடித்து வைத்துள்ளார். பெண்கள் அளித்த புகாரின் பேரில் பாலேஷ் தன்கரை கைது செய்த போலீசார், கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை அவர் மீது சுமார் 13 கற்பழிப்பு குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளனர். 

மேலும் அவரது லேப்டாப்பில் இருந்து கொரிய பெண்களுடன் பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் 47 வீடியோக்கள் அடங்கி ஹார்ட் டிரைவை போலீசார் மீட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவில் சிட்னி ட்ரைன்ஸ் என்ற நிறுவனத்தில் பணிபுரிந்த பாலேஷ் தன்கர், இந்த சம்பவத்தினால் சிறை சென்று ஜாமினில் வெளிவந்த பின்னர் ஆஸ்திரேலியாவின் ஃபைசர் நிறுவனத்தால் வேளைக்கு அழைக்கப்பட்டார் என்பதும் இது தொடர்பான வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.