இனி பெண்கள் மேலாடை இன்றி குளிக்கலாம்... ஜெர்மனி அரசு தந்த அனுமதி..!

 

ஜெர்மனியில் நீச்சல் குளங்களில் பெண்கள் மேலாடை இன்றி குளிக்க அனுமதி அளித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஐரோப்பிய நாடான ஜெர்மனியில், நீச்சல் குளம், சுற்றுலா தலங்களில் அனைத்து பாலினத்தவரும் முழு நிர்வாணமாக அலையும் சுதந்திரம் உள்ளது. இந்நிலையில், ஜெர்மனியின் பெர்லின் நகரில் உள்ள ஒரு நீச்சல் குளத்தில் சூரியக் குளியல் எடுத்த பெண், மேலாடை இல்லாமல் இருந்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அவர் நீச்சல் குளத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். இது அந்நாட்டு பெண்களிடையே விவாதத்தை கிளப்பியது.

இதனையடுத்து அந்தப் பெண், நகர நிர்வாக சட்ட அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், ஆண்களைப் போல, தானும் மேலாடை இல்லாமல் நீச்சல் குளத்தில் குளிப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். நீச்சல் குளத்தை நிர்வகிக்கும் ‘பெர்லினர் பேதர்பேடிரிப்’ நிறுவனத்தின் உத்தரவு, பாலின பேதத்தை ஏற்படுத்துவதாக உள்ளதாக அந்தப் பெண் புகார் கொடுத்தார்.

இது குறித்து, பெர்லின் நகர நிர்வாகம் ஆலோசனை நடத்தியது. இதையடுத்து, நீச்சல் குளங்களில், மேலாடை அணிவதற்கு இருந்த பாலின பேதம் நீக்கப்படுவதாக அறிவித்துள்ளது. அவரவர் விருப்பப்படி, மேலாடை இல்லாமல் குளிக்கலாம் என, நகர நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

இந்த புதிய விதி ஜெர்மனி தலைநகர் பெர்லினில் அமலுக்கு வந்துள்ளது. ஜெர்மனியில் சுதந்திர உடல் இயக்கம் என்ற புகழ்பெற்ற இயக்கம் உடல் சுதந்திரத்தை நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது. இந்த புதிய உத்தரவை அந்த இயக்கம் வரவேற்றுள்ளது.