அமெரிக்காவில் வேகமாக பரவும் புதிய கொரோனா.. அச்சத்தில் மக்கள்..!

 

அமெரிக்காவில் எச்.வி1 எனப்படும் புதிய வகை கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக பரவி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் சுமார் இரண்டரை ஆண்டுகளாக உலகம் முழுவதும் நீடித்தது. இதன் காரணமாக உலகம் முழுவதும் 69.37 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், வரலாறு காணாத அளவுக்கு பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டன. இதில் இருந்து உலகம் தற்போது மீண்டுள்ள நிலையில், சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் இன்னும் உள்ளதாக கூறப்படுகிறது.

இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகத்தையும் முடக்கி போட்ட நிலையில் அந்த வைரஸ் பரவல் சீனாவில் இருந்து தான் பரவியதாக அமெரிக்கா உட்பட பல உலக நாடுகள் குற்றம்சாட்டின. மேலும் உயிரியல் போரை தொடங்குவதற்காக சீனா மேற்கொண்ட ஆய்வே இதற்கு காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சீனா இதற்கு மறுப்பு தெரிவித்தாலும், வைரஸ் பரவல் அங்கிருந்தே பரவியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் உருமாறி தற்போது மக்களை தாக்கி வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவில் எச்.வி1 எனப்படும் புதிய வகை கொரோனா தொற்று பரவி வருகிறது.

இந்த புதிய வகை பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பெருந்தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.

மேலும் இந்த புதிய வகை கொரோனாவின் வீரியம் மற்றும் பரவலை கண்காணித்து வருவதாக அமெரிக்கா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. மக்கள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.