பெற்ற குழந்தையை மைக்ரோவேவ் ஓவனில் வைத்து கொன்ற தாய்.. தொட்டிலில் தூங்க வைப்பதாக நினைந்து நடந்த விபரீதம்!
அமெரிக்காவில் தொட்டிலில் தூங்க வைப்பதாக நினைத்து பெற்ற தாயே குழந்தையை மைக்ரோவேவ் ஓவனில் வைத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் மிசோரி மாகாணம் கன்சஸ் சிட்டி பகுதியைச் சேர்ந்தவர் மரிகா தாமஸ் (26). இவருக்கு ஒருமாத பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை மரிகா தாமஸ் தனது குழந்தையை தொட்டிலில் தூங்க வைப்பதாக நினைத்து உணவை சூடுபடுத்த பயன்படும் மைக்ரோவேவ் ஓவனில் வைத்துள்ளார்.
மைக்ரோவேவ் ஓவன் செயல்பட்டுக் கொண்டிருந்த நிலையில் குழந்தையின் ஆடை மற்றும் குழந்தையை சுற்றிவைக்கப்பட்டிருந்த துணி வெப்பத்தால் கருகி எரிந்த புகை வாசனை வந்துள்ளது. எரிந்த புகை வாசனை வருவது குறித்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வீட்டின் மைக்கோவேவ் ஓவனில் படுகாயங்களுடன் குழந்தை இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக குழந்தையை மீட்டு பரிசோதித்தனர். ஆனால், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் குழந்தையின் தாயான மரிகா தாமசை கைது செய்து சிறையில் அடைத்தனர். முதற்கட்ட விசாரணையில் மரிகா தாமஸ் மனநலம் பாதிக்கபப்ட்டவர் என தெரியவந்துள்ளது. தொட்டிலில் தூங்க வைப்பதாக நினைத்து பெற்ற தாயே குழந்தையை மைக்ரோவேவ் ஓவனில் வைத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.