டின் பீர் கேனை திறக்க முதலையின் உதவியை நாடிய வாலிபர்.. வைரல் வீடியோ
Updated: Jul 7, 2024, 00:07 IST
அமெரிக்காவில் பீர் கேனை திறப்பதற்காக முதலையின் உதவியை நாடியது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் படகில் சென்ற வாலிபர் ஒருவர் பீர் கேனை திறப்பதற்காக முதலையின் உதவியை நாடியது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது. 27 விநாடிகள் கொண்ட அந்த வீடியோவில் வாலிபர் ஒருவர் தனது கையில் ஒரு பீர் கேனுடன் அமர்ந்துள்ளார்.
அந்த கேனை திறக்க கஷ்டப்படும் அவர் படகில் இருந்து உணவு பொருளை ஆற்றில் வீசுவது போல காட்சி உள்ளது. அப்போது படகு அருகே ஒரு முதலை வருகிறது. இந்நிலையில் முதலை படகை நெருங்கியதும் அந்த வாலிபர் முதலையின் வாயில் பீர் கேனை வைப்பது போன்றும், முதலை அதை கடித்ததால் பீர் கேனை திறப்பது போன்றும் காட்சிகள் உள்ளது.