இத்தாலி பிரதமர் மெலோனியுடன் டேட்டிங்..? வைரலாகும் புகைப்படங்களுக்கு எலான் மஸ்க் பதில்
பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்கும் இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியோ மெலோனியும் டேட்டிங் செய்வதாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
உலக பணக்காரருக்கும் தொழிலதிபருமான எலான் மஸ்க்கும் இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியோ மெலோனியும் டேட்டிங் செய்வதாக சமூக வலைதளங்களில் அவர்கள் இருவரின் புகைப்படங்கள் பரவி வருகிறது. நியூயார்க்கில் சம்பீத்தில் அட்லாண்டிக் கவுன்சில் குளோபல் சிட்டிசன் விருது வழங்கும் விழா நடந்தது. இதில் பிரதமர் மெலோனிக்கு எலான் மஸ்க் விருது வழங்கி பாராட்டி பேசியுள்ளார்.
வெளிப்புறத்தை விட உள்ளுக்குக்குள் அதிக அழகாக இருக்கும் ஒருவருக்கு, இத்தாலி பிரதமராக தனது பணியை சிறப்பாக செய்து வரும் நான் பார்த்து வியக்கும் மெலோனிக்கு இந்த விருதை வழங்குவதில் மகிழ்ச்சி. மெலோனி உண்மையான நேர்மையான ஒருவர் என்று மஸ்க் அந்த விழாவில் மெலோனியை புகழ்ந்து தள்ளியுள்ளார். அவருக்கு மெலோனியும் தனது எக்ஸ் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
பல்வேறு காதல் உறவுகள் கொண்டவராக அறியப்படும் எலான் மஸ்க் மெலோனியுடன் டேட்டிங் செய்கிறாரா என்று அவர் மெலோனியை புகழும் வீடியோவையும் இருவரும் இருக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்து பலர் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் எலான் மஸ்க் அதை முற்றிலுமாக மறுத்துள்ளார். அந்த நிகழ்ச்சியில் என் தாயாருடன் பங்கேற்றேன். அதிபர் மெலோனியுடன் எந்த காதல் உறவும் இல்லை என்று மஸ்க் விளக்கம் அளித்துள்ளார்.