ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்தா அல்லது இஸ்ரேல் உளவாளிகளின் கைங்கரியமா..? அதிர்ச்சி சம்பவம்

 

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரான் அதிபராக பதவி வகித்து வருபவர் இப்ராகிம் ரைசி (63). இவர் இன்று காலை அண்டை நாடான அசர்பைஜானுக்கு சென்றிருந்தார். அசர்பைஜான் - ஈரான் இடையே பாயும் அரஸ் ஆற்றின் குறுக்கை புதிதாக அணை கட்டப்பட்டுள்ளது.

அந்த அணை திறப்பு விழாவிற்காக இப்ராகிம் ரைசி இன்று அசர்பைஜான் சென்றிருந்தார். அந்நாட்டு பயணத்தை முடித்துவிட்டு இப்ராகிம் ரைசி ஹெலிகாப்டர் மூலம் ஈரான் திரும்பி கொண்டிருந்தார். அப்போது, அவர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. அசர்பைஜானை ஒட்டியுள்ள ஈரானின் ஜல்பா நகரில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்ராகிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் மலைப்பகுதியில் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில்  ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக கருத்தப்படும் பகுதியில் கடுமையான மழை மற்றும் பனி மூட்டம் இருப்பதால் மீட்புப்பணிகள் தாமதாமாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.