கோகைன் போதையில்.. 2 முறை ஒபாமாவுடன் உடலுறவு.. பரபரப்பை கிளப்பும் லாரி சின்கிளேர்!
நானும் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவும் போதையில் இரண்டு முறை உடலுறவு கொண்டோம் என ஒருவர் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
ஃபாக்ஸ் நியூஸ் முன்னாள் தொகுப்பாளரான டக்கர் கார்ல்சனுடனான ஒரு நேர்காணலில், குற்றவாளியான கான் ஆர்ட்டிஸ்ட் லாரி சின்க்ளேர், ஒபாமாவுடன் உடலுறவில் ஈடுபட்டதாகக் கூறி அதிர வைத்தார். கார்ல்சன் எக்ஸ் வலைதளத்தில் லாரி சின்க்ளேருடனான நேர்காணல் கிளிப்பை பகிர்ந்து கொண்டார். “1999-ல் பாரக் ஒபாமாவுடன் உடலுறவு கொண்டதாகக் கூறும் நபர் தனது கதையைச் சொல்கிறார்” என்று அவர் அதற்கு தலைப்பிட்டிருந்தார்.
“நான் வெளியில் உள்ள ஒரு மதுக்கடையில் இருந்தேன், பராக் ஒபாமா என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட நபரும் அங்கிருந்தார். நான் கோக்கைனிற்கு 250 டாலர் கொடுத்தேன்” என அமெரிக்க வர்ணனையாளர் கார்ல்சனிடம் சின்க்ளேர் தெரிவித்தார். மேலும் தன்னுடன் ஒபாமா புகைப் பிடித்ததாக கூறிய அவர், அப்போது ஒபாமா இல்லினாய்ஸ் மாநில செனட்டராக இருந்தது தனக்கு தெரியாது என்றும் சின்க்ளேர் கூறினார்.
“நீங்கள் அவருடன் இரண்டு முறை உடலுறவு கொண்டுள்ளீர்கள், கோக்கைன் உட்கொண்டீர்கள், இரண்டு முறை புகைப் பிடித்துள்ளீர்கள், ஆனால் அவர் யார் என்று உங்களுக்குத் தெரியாதா?” என்று கார்ல்சன் கேட்டதற்கு, “எதுவும் தெரியாது” என்றார் சின்க்ளேர். 2008-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமா போட்டியிடும் போது, லாரி சின்க்ளேர் இதே போன்ற குற்றச்சாட்டை வைத்தார்.