நியூயார்க் அரசை ஏமாற்றி இரட்டை வேலை பார்த்த இந்தியர் கைது! 15 ஆண்டுகள் சிறைக்கு வாய்ப்பு!!

 

மக்கள் பணத்தை சட்டத்திற்கு புறம்பாக எடுத்துக் கொண்ட குற்றத்திற்காக அமெரிக்க இந்திய இளைஞர் மெகுல் கோஸ்வாமி கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

நியூயார்க் மாநிலத்தின் கணிணித் துறையில் வீட்டிலிருந்தே வேலைபார்க்கும் வசதியுடன் முழு நேர ஊழியராகப் பணியாற்றி வந்துள்ளார் 39 வயது மெகுல் கோஸ்வாமி. வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் வசதி கிடைத்ததால் அதே நேரத்தில் வேறு ஒரு நிறுவனத்திலும் முழு நேரப் பணி புரிந்து வந்துள்ளார். இது அரசு சட்டத்திற்கு புறம்பான செயலாகும்.

மக்கள் பணத்தை ஏமாற்றி திருடிய குற்றத்திற்காக மெகுல் கோஸ்வாமியை சரகோட்டா கவுண்டி காவல்துறை கைது செய்துள்ளது. இதன் மூலம் அரசுப் பணம் 50 ஆயிரம் டாலர்கள் பறிபோனதாகக் கூறப்படுகிறது. 15 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குரிய குற்றம்ச்சாட்டின் அடிப்படையில் வழக்கு தொடரப்பட்ட்டுள்ளது.

இந்தியாவில் ஐடி நிறுவனங்கள் இப்படி இரட்டை வேலைக்கு செல்வதை கடுமையாக கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது, கூடுதல் பணத்திற்கு ஆசைப்பட்டு வாழ்க்கையையே தொலைச்சிட்டு இருக்காரு மெகுல் கோஸ்வாமி.