கல்லறைக்கான இடம் தேர்வு செய்து விட்டேன்.. போப் பிரான்சிஸ் அறிவிப்பு

 

கல்லறைக்கான இடம் தேர்வு செய்து விட்டேன் என்று போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

கத்தோலிக்க மதத் தலைவராக போப் பிரான்சிஸ் செயல்பட்டு வருகிறார். இத்தாலியின் வாடிகன் நகரில் வசித்து வரும் இவருக்கு, அடிக்கடி உடல் நல பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறார். இந்த நிலையில், போப் பிரான்சிஸ் அவருடைய கல்லறையை தேர்வு செய்திருக்கிறார். ஆனால் அது, இதற்கு முன் போப் பதவி வகித்தவர்கள் அடக்கம் செய்யப்பட்ட வாடிகன் நகரில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்கா அல்ல.

87 வயதுடைய பிரான்சிஸ், ரோம் நகரில் உள்ள சான்டா மரியா மேகியோர் பசிலிக்காவில் என்னுடைய உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் என விரும்புகிறேன் என்று இன்று வெளியான அவருடைய பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

இதனால், நூறாண்டுகளுக்கு பின் வாடிகன் நகருக்கு வெளியே அடக்கம் செய்யப்படும் முதல் போப் ஆகிறார். கடந்த 1903-ம் ஆண்டு செயின்ட் பீட்டர்ஸ் தவிர்த்து வேறிடத்தில் அடக்கம் செய்யப்பட்டவர் போப் லியோ 8 ஆவார்.  அவருடைய உடல் ரோமில் உள்ள செயின்ட் ஜான் பசிலிக்காவில் அடக்கம் செய்யப்பட்டது.

போப் ஆவதற்கு முன்பு, ரோம் நகருக்கு பிரான்சிஸ் செல்லும்போது, ஒரு ஞாயிற்று கிழமை தினத்தில் சான்டா மரியா மேகியோர் பசிலிக்காவுக்கு செல்வது வழக்கம். 2013-ம் ஆண்டு போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரும், அறுவை சிகிச்சை செய்த பின்பும் அவர் ரோமிற்கு சென்று பசிலிக்காவில் வழிபட்டிருக்கிறார்.

இதற்கு முன் வாடிகனில் உள்ள பசிலிக்காவில் 7 போப்புகள் அடக்கம் செய்யப்பட்டு இருக்கின்றனர் என வாடிகனின் அதிகாரப்பூர்வ ஊடக தகவல் தெரிவிக்கின்றது.