ராயல் என்ஃபீல்டு முதல் டொயோட்டா கேம்ரி வரை.. கனடாவில் மாஸ் காட்டும் இந்திய கார்கள்..!

 

இந்தியாவின் பிரபலமான கார் மாடல்கள் கனடாவில் வசிக்கும் இந்தியர்களிடையே மிகவும் பிரபலமாகியுள்ளது.

இந்தியர்கள் பல்வேறு நாடுகளிலும் சென்று குடியேறி வருகின்றனர். டெக் உள்ளிட்ட துறைகளில் இந்தியர்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளதால் இயல்பாகவே அவர்கள் பல்வேறு பகுதிகளிலும் சென்று செட்டிலாகி வருகின்றனர். குறிப்பாக அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் கணிசமாக இந்தியர்கள் உள்ளனர். இந்த நாடுகளில் குறிப்பிட்ட சில நகரங்களில் இந்தியர்களின் மக்கள் தொகை அதிகமாகவே இருக்கும்.

இந்த நிலையில், கனடா நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் அல்லது இங்கிருந்து வேலைக்காக கனடா நாட்டிற்கு சென்றவர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் சிறந்த 10 இந்திய கார் மற்றும் பைக் பற்றிதான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.

டாடா டியாகோ: 

தற்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தன்னுடைய அனைத்து மாடல் கார்களையும் கனடா நாட்டில் விற்பனை செய்து வருகிறது. இதில் முதலாவதாக டாடா டியாகோ என்ற ஹேட்ச்பேக் மாடல் கார் வருகிறது. கனடா டாலரில் இதன் விலை 9,342 ஆகும். இந்திய ரூபாய் மதிப்பில் இது ரூ.5.75 லட்சமாகும்.

ஹூண்டாய் வென்யூ: 

இந்தியாவில் பிரபலமான காம்பேக்ட் SUV வாகனமாக கருதப்படும் ஹூண்டாய் வென்யூ, ஒரே சமயத்தில் வட அமெரிக்காவிலும் கனடாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த காரின் ஆரம்ப விலை கனடா டாலரில் 22,374 ஆகும். இந்திய ரூபாய் மதிப்பில் இது ரூ.13.77 லட்சம் ஆகும்.

டாடா ஹேரியர்: 

டாடா நிறுவனத்தின் மற்றொரு பிரபலமான SUV வகை காரான ஹேரியர், கனடாவில் நன்றாக விற்பனை ஆகி வருகிறது. இந்த காரின் ஆரம்ப விலை கனடா டாலரில் 24,408 ஆகும். இந்திய ரூபாய் மதிப்பில் இது ரூ.15.02 லட்சம் ஆகும்.

ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350: 

ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் தனது பெரும்பாலான மாடல்களை கனடாவில் விற்பனை செய்து வருகிறது. மிகவும் புகழ்பெற்ற ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 பைக் 6,029 கனடா டாலருக்கு கிடைக்கிறது. இந்திய ரூபாய் மதிப்பில் இந்த பைக்கின் விலை ரூ.3.71 லட்சமாகும்.

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்: 

ராயல் என்ஃபீல்டின் புதிய வரவான இமாலயன் பைக், கனடா நாட்டில் மிகப்பெரிய ஜாம்பவான் நிறுவனங்களோடு போட்டி போடுகிறது. அங்கு இந்த பைக்கின் விலை 6,500 கனடிய டாலராகும். இந்திய மதிப்பில் இது ரூ.4 லட்சம் ஆகும்.

டாடா சஃபாரி: 

ஏழு பேர் வரை சௌகரியமாக அமர்ந்து செல்ல கூடிய டாடா நிறுவனத்தின் முன்னனி காரான சஃபாரி, கனடா நாட்டிலும் கிடைக்கிறது. அங்கு இந்த காரின் விலை 25,457 கனடிய டாலராகும். இந்திய மதிப்பில் இது ரூ.15.6 லட்சம் ஆகும்.

ஹூண்டாய் டஸ்கன்: 

உலக மார்க்கெட்டை கருத்தில் கொண்டே உற்பத்தி செய்யப்பட்ட ஹூண்டாய் டஸ்கன், 2022-ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகமானது. கனடாவிலும் இந்த கார் நன்றாக விற்பனையாகி வருகிறது. இந்த காரின் ஆரம்ப விலை கனடா டாலரில் 28,449 ஆகும். இந்திய ரூபாய் மதிப்பில் இது ரூ.17.5 லட்சம் ஆகும்.

ராயல் என்ஃபீல்டு 650 ட்வின்ஸ்: 

ஏற்கனவே கிளாசிக் 350 மாடலை கனடாவில் விற்பனை செய்து வரும் ராயல் என்ஃபீல்ட், அதோடு சேர்த்து இண்டர்செப்டார் மற்றும் காண்டினெண்டல் ஜிடி 650 டிவின்ஸ் பைக்குகளையும் விற்பனை செய்கிறது. கனடிய டாலரில் இந்த பைக்கின் விலை முறையே ரூ. 7,499 மற்றும் ரூ. 9,599. இந்திய ரூபாய் மதிப்பில் இது ரூ.4.6 லட்சம் மற்றும் ரூ.5.9 லட்சம்.

டொயோட்டா கேம்ரி: 

இந்தியாவில் பிரபலமாக இருக்கும் டொயோட்டா கேம்ரி காரும் உலகளாவிய வாடிக்கையாளர்களை கருத்தில் கொண்டே உற்பத்தி செய்யப்பட்டன. இந்த கார் கனடாவில் பெட்ரோல் மற்றும் ஹைபிரிட் வகைகளில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த சீடான் மாடல் காரின் ஆரம்ப விலை கனடா டாலரில் 30,590. இந்திய மதிப்பில் இது ரூ.18.83 லட்சமாகும். ஆனால் இந்தியவில் கிடைக்கக் கூடிய டொயோட்டா கேம்ரி காரின் விலை எவ்வுளவு தெரியுமா? ரூ.46.17 லட்சம்.

கியா செல்டோஸ்: 

இந்தியாவின் பிரபலமான SUV மாடல் கார்களில் ஒன்றாக கருதப்படும் கிய செல்டோஸ், கனடாவிலும் விற்பனையாகிறது. இந்த காரின் ஆரம்ப விலை கனடிய டாலரில் 23,695 ஆகும். இந்திய ரூபாய் மதிப்பில் இது ரூ.14.5 லட்சமாகும்.