அமெரிக்காவில் முதல் முறையாக சூரசம்காரம் விழா.. ஆயிரம் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம்!

 

அமெரிக்காவில் உள்ள ஹுஸ்டன் ஸ்ரீமீனாட்சி அம்மன் திருக்கோவிலில் சூரசம்ஹாரம் விமரிசையாக கொண்டாடப்பட்டது.

அமெரிக்காவில் 47 ஆண்டுகளாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் டெக்ஸஸ் மாகாணத்தின் ஒரு அடையாளமாகவும் தமிழர்களுக்கு ஒரு முக்கிய அடையாளமாக அமைந்து வட அமெரிக்காவில் உள்ள அனைத்து பக்தர்களுக்கும் தமிழ் சார்ந்த நிகழ்வுகளை, திருவிழாக்களை மிக விமர்சையாக மதுரையில் உள்ள  ஸ்ரீமீனாட்சி அம்மன் கோவில் விழாக்கள் போலே இங்கும் அதே முறையில் கடந்த 47 ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. 

வட அமெரிக்காவில் முதல் முறையாக சூரசம்காரம் மிக விமர்சையாக இந்த கோவிலில்  முருகன் சன்னதியில் கொண்டாடப்பட்டது. அமெரிக்காவில் வார நாட்களில் மக்களை கோவிலுக்கு சன்னதிக்கு வருவதென்பது சற்று கடினமான ஒன்று. புதன்கிழமையான அன்று மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த நிகழ்ச்சி விமர்சையாக சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 

இந்த நிகழ்வின் முக்கிய அம்சமாக முருகனுக்கு அபிஷேகம், சூரசம்ஹாரம் வதம் செய்தல், வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் மற்றும் ஊர்வலம் ஆகிய நிகழ்வுகள் நடத்தப்பட்டது. சுமார் ஆயிரம் பக்தர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். 

<a href=https://youtube.com/embed/C8vPR2QyaOo?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/C8vPR2QyaOo/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">

இதில் முக்கியமாக காலை பள்ளிக்கு செல்ல வேண்டும் என்ற நிலையில் கூட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு முருகரைப் பற்றி அருமையாக பக்தி பாடல்கள் பாடியது அனைவரும் பரவசமூட்டியது. கந்தனுக்கு அரோகரா முழக்கம், வாத்தியம், சண்ட மேளம் சத்தம் விண்ணை முட்டியது. இதுபோல் பல்வேறு திருவிழாக்கள் மூலம் நம் கலாச்சாரம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு போய் சேர்க்கும் என்பதில் ஐயமில்லை.

தகவல்: பெருமாள் அண்ணாமலை