வேலை நேரத்தில் இளம் பெண்ணுடன் உல்லாசம்.. வைரலான வீடியோவால் போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட்!

 

அமெரிக்காவில் போலீஸ் வாகனத்திற்கு உள்ளே வைத்து, பெண்ணுடன் போலீஸ் அதிகாரி உல்லாசம் அனுபவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் மேரிலான்ட் மாகணத்தின் பிரின்ஸ் ஜார்ஜ் கவுண்டியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது. பணி நேரத்தில் இளம் பெண்ணுடன் 40 நிமிடம் காவல்துறை வாகனத்திற்குள் உல்லாசமாக இருந்த போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 

இருவரும் காருக்குள் உல்லாசம் அனுபவித்து விட்டு சுமார் 40 நிமிடங்கள் கழித்து வெளியே வந்துள்ளனர். அதன் பின்னர் ஆளுக்கு ஒரு பக்கமாக பூங்காவை நோக்கி செல்கின்றனர். இருவரும் முன்னரே அறிந்தவர்களா அல்லது திடீரென சந்திப்பு நடந்ததா என்பது தெரியவில்லை. இருப்பினும் போலீஸ் வாகனத்திற்கு உள்ளே வைத்து, பெண்ணுடன் போலீஸ் அதிகாரி உல்லாசம் அனுபவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே முன்னாள் காதலியின் மகளை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் ஒரு மாதம் இவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.