மர்ம நபர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் 5 பேர் காயம்.. துருக்கியில் பயங்கரம்
Updated: Aug 14, 2024, 02:20 IST
துருக்கியில் நடைபெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 5 பேர் படுகாயம் அடைந்த நிலையில் 2 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
துருக்கி நாட்டின் எஸ்கிசிர் மாகாணம் எஸ்கிசிர் நகரில் உள்ள தேநீர் கடையில் இன்று கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. இன்று அந்த கடையில் வாடிக்கையாளர்கள் தேநீர் குடித்துக் கொண்டிருந்தபோது அங்கு ஹெல்மெட், துப்பாக்கி துளைக்காத கவச உடை அணிந்து கத்தியுடன் வந்த இளைஞர் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினார்.
இந்த கத்திக்குத்து தாக்குதலில் 5 பேர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில், 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.