வணிக வளாகம் அருகே குண்டுவெடிப்பு.. கிரீஸில் அதிர்ச்சி சம்பவம்

 

கிரீஸ் நாட்டில் நடந்த குண்டு வெடிப்பில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதேன்ஸ் அருகே உள்ள பிரயஸ் நகரில் மிகப்பெரிய துறைமுகம் அமைந்துள்ளது. இந்த துறைமுகம் அருகே வணிக வளாகம் உள்ளது. இந்நிலையில், இந்த வணிக வளாகம் அருகே இன்று அதிகாலை குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்த சம்பவத்தில் வணிக வளாகத்தில் சேதம் ஏற்பட்டது. மேலும், வணிக வளாகத்தின் கண்ணாடிகள் உடைந்தன. அதிகாலை நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழப்பு சம்பவங்கள் ஏற்படவில்லை, யாருக்கும் எந்த வித பாதிப்பும், காயமும் ஏற்படவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை நடத்தியது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. குண்டுவெடிப்பு நடந்த பகுதியை சுற்றி வளைத்து பல மணி நேரம் போலீசார் தடயங்களை சேகரித்தனர்.

கிரேட்டர் ஏதென்ஸில் வணிக இலக்குகளுக்கு எதிரான தாக்குதல்கள் கடந்த காலங்களில் போர்க்குணமிக்க ஸ்தாபன எதிர்ப்பு குழுக்களால் கூறப்பட்டது, ஆனால் குற்றவியல் மிரட்டி பணம் பறிக்கும் கும்பல்களால் நடத்தப்பட்டது.