கடவுள் இருக்காரா? இல்லையா? பள்ளியில் கேட்கப்பட்ட கேள்வியால் சர்ச்சை
அமெரிக்காவில் பள்ளி மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட வீட்டுப்பாடத்தில் இடம்பெற்ற கேள்விகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் ஒக்லஹாமா மாகாணத்தில் ஒரு பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு படிக்கும் மாணவர்களுக்கு சமூக அறிவியல் பாடத்தில் வீட்டுப்பாடம் செய்து வரும்படி அசைன்மென்ட் கொடுக்கப்பட்டது. அந்த அசைன்மென்டில் ஆராய்ச்சி செய்து, உரிய விளக்கத்துடன் பதிலளிக்கும்படி சில கேள்விகள் கொடுக்கப்பட்டன.
அதில் கேட்கப்பட்ட கேள்விகளைக் கண்ட மாணவர்களின் பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதில் இடம்பெற்ற கேள்விகளை ஒரு மாணவியின் தாயார் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அது சர்ச்சையாக மாறியது.
அதில் இடம்பெற்ற கேள்விகள் பின்வருமாறு:
- உலகம் உருவானது எப்படி?
- அதனை உருவாக்கியது யார்?
- எப்போது தீமை தோன்றியது. இப்போதும் உள்ளதா?
- ஒழுக்கம் என்றால் என்ன?
- மதம் என்றால் என்ன?
- கிறிஸ்துவம் என்றால் என்ன?
- கிறிஸ்தவராக இருப்பதன் அர்த்தம் என்ன?
- கடவுள் இருக்காரா? இல்லையா?
- சாத்தான் இருப்பது உண்மையா? நல்லது அல்லது கெட்டது அல்லது இரண்டையும் மக்கள் ஏற்றுக்கொண்டனரா?
என இதுபோன்ற 10 கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன.
ஒக்லஹாமாவில் உள்ள உயர்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட அசைன்மென்ட். உலக வரலாற்றில் கேட்கப்பட்ட கேள்விகள். இதனை ஆராய்ச்சித்தாள் என்கின்றனர். இது மிகவும் அற்பத்தனமானது என பதிவிட்டுள்ளார்.
அவரது இந்தப் பதிவைக் கண்ட சமூகதள வாசிகள் அப்பள்ளியையும், கேட்கப்பட்ட கேள்விகளையும் விமர்சித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர். அவரது இந்தப் பதிவைக் கண்ட சமூகதள வாசிகள் அப்பள்ளியையும், கேட்கப்பட்ட கேள்விகளையும் விமர்சித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர்.