ஒரே நாளில் 23 பற்களை பிடுங்கிய டாக்டர்கள்.. மாரடைப்பால் உயிரிழந்த நபர்

 

சீனாவில்  ஒரே நாளில் 23 பற்களும் பிடுங்கப்பட்ட நபர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சீனாவின் ஜெய்ஜியாங் பிராந்தியத்தில் உள்ள ஜின்ஹுவா  நகரில் உள்ள  யோங்காங் டேவே (Yongkang Deway) பல் மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி ஹூவாங் [Huang] என்ற  நபருக்கு  மாற்று பற்கள்  பொருத்தும் இம்பிளான்ட் அறுவை சிகிச்சையானது நடத்தப்பட்டுள்ளது. 

அறுவை சிகிச்சையின்போது அவரின் 23 பற்களும் பிடுங்கப்பட்டு  அதே நாளில் 12 புதிய பற்கள் இம்மீடியேட் ரெஸ்டோரேஷன் [Immediate restoration] முறை இம்பிளாட் செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில்  மருத்துவமனையில் இருந்து  திரும்பிய அவர்  இரண்டு வாரங்கள்  கழித்து ஆகஸ்ட் 28-ம் தேதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக அவரது மகள் கடந்த சமூக வலைதளத்தில் தெரிவித்ததை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உயிழந்தவரின் வயது வெளிப்படுத்தப்படவில்லை.