ராணுவம் - துணை ராணுவம் இடையே மோதல்.. சூடானில் 100-க்கும் மேற்பட்டோர் பலி!

 

சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகளிடையே ஏற்பட்ட மோதலில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் ஆர்எஸ்எப் துணை ராணுவ படைகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே சுமார் ஒரு ஆண்டுக்கும் மேலாக மோதல் நீடித்து வருகிறது. இந்த மோதலில் இதுவரை சுமார் 14 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் சூடானின் கெசிரா மாகாணத்தில் உள்ள வாத் அல்-நவுரா என்ற கிராமத்திற்குள் நேற்று ஆர்எஸ்எப் துணை ராணுவ படையினர் புகுந்து தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.