பகீர் வீடியோ.. அமெரிக்காவில் சரக்கு விமானம் தரையில் விழுந்து விபத்து.. 2 பேர் பலி!

 

அமெரிக்காவில் சரக்கு விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் உள்ள ஃபேர்பேங்க்ஸ் நிலையத்தில் இருந்து நேற்று டக்ளஸ் சி-54 ஸ்கைமாஸ்டர் என்ற சரக்கு விமானம் புறப்பட்டது. புறப்பட்டு 11 கிலோமீட்டர் தூரம் சென்ற நிலையில் தனனா நதியில் விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இருவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டது. நதியின் கரையில் ஒரு செங்குத்தான மலையில் சரிந்து விமானம் தீப்பிடித்ததாக அலாஸ்கா மாநில காவல்துறை தெரிவித்தனர். மேலும், இதில் உயிர் பிழைத்தவர்கள் யாரும் கிடைக்கவில்லை என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

allowfullscreen

இச்சம்பவம் குறித்து தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் அலாஸ்கா பிராந்திய அலுவலகத்தின் தலைவரான கிளின்ட் ஜான்சன் கூறுகையில், “விமானம் புறப்பட்டு விபத்திற்குள்ளான நேரத்தில் என்ன நடந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் டவர் operator ஒரு பாரிய புகை மண்டலத்தைக் கண்டார்” என்றார்.