பிரேக் அப் செய்த காதலி கொடூர கொலை.. இத்தாலியில் அதிர்ச்சி சம்பவம்!

 

இத்தாலியில் தன்னுடனான காதலை முறித்ததால் கத்தியால் சரமாரியாக காதலி குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இத்தாலியின் வினிடோ மாகாணத்தில் பட்ஹா பல்கலைக்கழகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பல்கலைகழகத்தில் மாணவி ஹுலியா சியோஷெத்தின் (22) இறுதியாண்டு பயொமெடிக்கல் பட்டப்படிப்பு படித்து வந்ததார். இவரும் பிலிப்போ டுரிடா (22) என்ற இளைஞரும் காதலித்து வந்தனர். இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக காதலர்கள் ஹுலியாவும், பிலிப்போவும் பிரிந்தனர்.

அதேவேளை, கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க புதிய உடை வாங்க கடந்த 16-ம் தேதி ஹுலி வணிக வளாகத்திற்கு சென்றுள்ளார். அவர் தனது முன்னாள் காதலன் பிலிப்போவையும் அழைத்து சென்றுள்ளார். ஆனால், வணிக வளாகத்திற்கு சென்ற ஹுலி வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக ஹுலியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது, ஹுலியின் வீட்டின் அருகே அவரது முன்னாள் காதலன் பிலிப்போவின் கார் வந்ததை கண்டுபிடித்தனர். அந்த காரில் வைத்து ஹுலியை பிலிப்போ தாக்கியது தெரியவந்தது. மேலும், தப்பியோட முயற்சித்த ஹுலியை சரமாரியாக தாக்கிய பிலிப்போ காரில் கடத்தி சென்றுள்ளார்.

பின்னர், தன்னுடனான காதலை முறித்ததால் ஆத்திரமடைந்த பிலிப்போ தனது முன்னாள் காதலி ஹுலியை ஆள்நடமாட்டமற்ற  ஏரிக்கரைக்கு கடத்தி சென்றுள்ளார். அங்கு ஹுலியை பிலிப்போ கத்தியால் சரமாரியாக குத்திக்கொலை செய்துள்ளார். பின்னர் உடலை ஏரிக்கரையில் வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார்.

இதனை தொடர்ந்து ஏரிக்கரையில் பிணமாக கிடந்த ஹுலியின் உடலை கைப்பற்றிய போலீசார் தப்பியோடிய முன்னாள் காதலன் பிலிப்போவை தீவிரமாக தேடி வந்தனர். தீவிர தேடுதலுக்கு பின் கிழக்கு ஜெர்மனி சாலைப்பகுதியில் பிலிப்போவை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பிலிப்போவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.