லாபம் சம்பாதிக்கும் பிராமணர்கள்.. அமெரிக்க வர்த்தக ஆலோசகர் சொன்னதன் அர்த்தம் தவறாகப் புரிந்து கொள்ளப் பட்டதா?

 

அமெரிக்க வெள்ளை மாளிகை வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ சொன்ன ஒரு கருத்து இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ரஷ்யாவின் கச்சா எண்ணெயை குறைந்த விலைக்கு வாங்கி கொள்ளை லாபம் சம்பாதிக்கிறார்கள் பிராமணர்கள் என்று பீட்டர் நவரோ கூறியிருந்தார்.

பிராமணர்கள் எண்ணெய் சுத்தகரிப்பு ஆலைகளை வைத்துள்ளார்களா என்ற கேள்வி பரவலாக எழுந்தது. இந்தியாவில் பெரிய எண்ணெய் சுத்தகரிப்பு நிறுவனங்கள் ரிலையன்ஸ், நயாரா, ஹெச்பிசிஎல் - மிட்டல் ஆகியவையாகும். ரிலையன்ஸ் அம்பானி குடும்பத்தினருடையது. நயாரா முந்தைய எஸ்ஸார் குழுமத்திற்கு உரியது. தற்போது ரஷ்ய நிறுவனம் தான் பெரும் பங்குதாரராக உள்ளது. ஹெச்பிசிஎல்-மிட்டல் அரசு நிறுவனதிற்கும்லஷ்மி மிட்டல் குடும்பத்திற்கும் சொந்தமானது.  இந்த நிறுவனங்கள் எதிலும் பிராமணர்கள் உரிமையாளர்கள் இல்லை.

அமெரிக்க அதிகாரிக்கு இந்த உண்மையெல்லாம் தெரியாமலா அப்படி ஒரு கூற்றைச் சொல்லியிருப்பார். வாய்ப்பில்லை. அமெரிக்காவில் ”பாஸ்டன் பிராமின்ஸ்” என்ற ஒரு சொற்றொடர் மிகவும் பிரபலமானதாகும். 19ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் செல்வாக்கு கொண்ட மிகப்பெரிய பணக்கார குடும்பமான புரிட்டன் வம்சாவளியினரை இப்படி அழைப்பது வழக்கம்.  கொழுத்த பணக்காரர்கள் என்று சொல்வார்களே, அப்படிச் சொல்லலாம்.

அம்பானி, ருயியா மற்றும் மிட்டல் குடும்பத்தைத் தான் இப்படி பாஸ்டன் பிராமின்ஸ் என்ற குறியீட்டில் பீட்டர் நவரோ சொல்லியிருக்கக் கூடும் என்று ஒரு வாதம் முன் வைக்கப்படுகிறது. ஆனால் மறுபுறமோ, இந்தியாவின் சாதிக் கட்டமைப்புகள் பற்றி அமெரிக்கா தற்போது நன்றாகவே புரிந்துள்ளது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பிராமணர்கள் தான் இந்தியாவின் ஆட்சியை மறைமுகமாக நிர்வகிக்கிறார்கள். நிதித்துறை, வெளியுறவுத்துறை போன்ற முக்கிய துறைகள் பிராமணர்கள் வசமே உள்ளது

ஹவ்டி மோடி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த ஆர்.எஸ்.எஸ் ஸின் கிளை அமைப்பான ஹெச்.எஸ்.எஸ். அமெரிக்காவிலும் பரவலாக ஊடுறுவி உள்ளது. இதையெல்லாம் அறிந்து தான் பிராமணர்கள் என்று பீட்டர் நவரோ குறிப்பிட்டுள்ளார் என்று மற்றொரு வாதமும் முன் வைக்கப்படுகிறது.