அமெரிக்காவில் திறக்கப்பட்ட உயரமான அம்பேத்கர் சிலை.. கொட்டும் மழையிலும் ஓடாத கூட்டம்!

 

அமெரிக்காவில் 19 அடி உயர அம்பேத்கர் சிலை கடந்த 14-ம் தேதி திறந்து வைக்கப்பட்டது.

இந்திய சுதந்திரத்திற்கு பிறகு பிரதமர் ஜவகர்லால் நேரு அமைச்சரவையில் சட்ட மற்றும் நீதி துறை அமைச்சராக இருந்தவர் பி.ஆர்.அம்பேத்கர். 1990-ல் அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. உலக அளவில் போற்றுதலுக்கு உரிய சிறந்த தலைவர்களில் ஒருவராக விளங்கும் அண்ணல் அம்பேத்கரின் பெருமையை பறைசாற்றும் விதமாக அமெரிக்காவில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் அம்பேத்கருக்கு வைக்கப்பட்டு இருக்கும் மிக உயரமான சிலை இதுவாகும். அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் உள்ள அக்கோகீக் நகரத்தில் அம்பேத்கர் சர்வதேச மையத்துக்கு (ஏஐசி) சொந்தமான 13 ஏக்கர் நிலத்தில் இந்தச் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. அம்பேத்கரின் போதனைகளை பரப்பவும், சமத்துவம் மற்றும் மனித உரிமைகளின் சின்னமாக நீடிக்கும் சிலை அமைக்கும் பணியை மேற்கொண்ட ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

குஜராத் மாநிலத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலையை உருவாக்கிய சிற்பி ராம் சுடார் தான் இந்த அம்பேத்கர் சிலையையும் வடிவமைத்துள்ளார். இந்த சிலைக்கு Statue of Equality (சமத்துவத்தின் சிலை) என்று பெயரிடப்பட்டுள்ளது. நமது நாட்டிற்கு வெளியே அம்பத்கருக்கு அமைக்கப்பட்டுள்ள மிக உயரமான சிலை இதுவேயாகும்.