அமெரிக்காவில் உலா வரும் ஏலியன்கள்.. மியாமி போலீசார் விளக்கம்!
அமெரிக்காவில் உள்ள மால் ஒன்றில் ஏலியன்கள் வானத்தில் இருந்து இறங்கியதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
UAP (Unidentified Anomalous Phenomena) என்றழைக்கப்படும் அடையாளம் காணப்படாத அசாதாரண நிகழ்வுகள், மேலும் குறிப்பாக, UFO (Unidentified Flying Object) என்றழைக்கப்படும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் ஆகியவை உலகின் மிகப்பெரிய மர்மங்களில் ஒன்றாக இன்று வரை விவாதத்திலேயே உள்ளது.
அனைவருக்கும் எளிதாக புரியம் பொது மொழியில் சொல்ல வேண்டும் என்றால், ஏலியன்கள் இருக்கின்றதா, அவை நமது பூமிக்கு வருவதுண்டா போன்ற மர்மங்கள் தான் அவை. இந்த மர்மமான விஷயங்களை ஆராய நாசா இப்போது சிறந்த தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவின் உதவியை கையில் எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
இந்த நிலையில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணம், மியாமி பகுதியில் மால் ஒன்று அமைந்துள்ளது. இந்த மாலில் 10 அடி உயரம் கொண்ட ஏலியன் ஒன்று சுற்றித் திரிவதாக திடீரென புகார் எழுந்த சுற்றித் திரிவதாக திடீரென புகார் எழுந்த நிலையில், அப்பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் மியாமி மாலுக்கு மேலே ஏலியன்கள் வாகனங்கள் என பரவலாக கூறப்படும் பறக்கும் தட்டுகளின் வெளிச்சம் தென்பட்டதும் இதுதொடர்பாக வெளியாகி இருக்கும் வீடியோவில் பதிவாகி இருப்பதாக கூறப்படுகிறது.
இதன் பிறகு நடத்தப்பட்ட விசாரணை மற்றும் சோதனையின் அடிப்படையில் இந்த வீடியோ மற்றும் ஏலியன் வருகை எல்லாமே சில விஷமிகள் கிளப்பிவிட்ட வதந்தி என தகவல் வெளியாகி உள்ளது. சிறுவர்கள் சிலர் பட்டாசு வெடித்ததாகவும் இதனால் ஏற்பட்ட வெளிச்சத்தை வைத்து ஏலியன்கள் புகுந்ததாக காட்டுத்தீ போல வதந்தி பரவியிருப்பதாகவும் மியாமி நகர போலீசார் கூறியுள்ளனர்.