திடீரென தீப்பிடித்து எரிந்த விமான என்ஜின்.. அலறியடித்து ஓடிய பயணிகள்.. அதிர்ச்சி வீடியோ
Nov 5, 2024, 23:56 IST
இந்தோனேசியாவில் விமானத்தின் என்ஜினில் திடீரென தீப்பிடித்ததால் பயணிகள் அலறியடித்த படி விமானத்தில் இருந்து அவசரமாக வெளியேறினர்.
இந்தோனேசியாவின் பப்புவா மாகாணத்தின் ஜெயபுராவில் உள்ள சென்டானி விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாராக இருந்த திரிகானா ஏர் 737-500 என்ற விமானத்தின் என்ஜினில் திடீரென தீப்பிடித்ததால் பயணிகள் அலறியடித்த படி விமானத்தில் இருந்து அவசரமாக வெளியேறினர்.
விமானத்தின் இறக்கையில் இருந்து தீப்பொறி பறப்பது மற்றும் பயணிகள் விமானத்தில் இருந்து அவசர அவசரமாக கீழே இறங்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தினால் யாரும் உயிரிழக்கவில்லை என்றும் சில பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும் சென்டானி விமான நிலைய அதிகாரி சூர்யா ஏகா தெரிவித்தார்.