எகிப்தில் அடுத்தடுத்து கார்கள் மோதி விபத்து.. 32 பேர் பலி!
எகிப்தில் அடுத்தடுத்து கார்கள் மோதி கொண்டதில் 32 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய ஆப்பிரிக்க நாடான எகிப்தின் தலைநகர் கெய்ரோ - அலெக்சாண்ட்ரியா நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலையில் சென்ற கார்கள் நேற்று திடீரென ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்கு உள்ளாகின. இதில், பயணியர் பேருந்து உட்பட மற்ற வாகனங்களும் விபத்தில் சிக்கின.
எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த இந்த விபத்தின் காரணமாக, சில வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர், வாகனங்களில் ஏற்பட்ட தீயை, அணைத்ததுடன், அதில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 35 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 63 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.