ஏலியன்போல் தோற்றமளிக்க விரும்பி சூனியக்காரி போல் மாறிய இளம்பெண்.. புனித நீர் தெளிக்கும் மக்கள்.. விநோத சம்பவம்!

 

இங்கிலாந்தில் இளம் பெண் ஒருவர் ஏலியன் போல் தனது தோற்றத்தை மாற்றியதால் பொதுமக்கள் அவரை சூனியகாரியாக பார்த்து வருகின்றனர்.

உலகில் சில மனிதர்கள் வித்தியாசமாக தோற்றமளிக்க தலை, உதடு, மூக்கு, காது, முடி, விரம், நகம் உள்ளிட்டவற்றால் மற்றவர்களிடம் வித்தயாசம் காட்டிக்கொள்வார். அந்த வகையில், இங்கிலாந்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் ஏலியன்போல் தோற்றமளிக்க விரும்பி சூனியக்காரி போல உருமாறியுள்ள சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறியுள்ளது.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் இளம் பெண் ஃப்ரீஜா ஃபோரியா (27). இவர், மற்றவர்களை விட தான் வித்தியாசமாக தோற்றமளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தன்னை முழுவதுமாக உருமாற்றிக் கொண்டுள்ளார். இவர் 11 வயது முதலே தனது தோற்றத்தை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார். தற்போது அவரை பார்ப்பவர்கள் உண்மையிலே ஒரு ஏலியனை பார்ப்பது போல் வியந்து பார்க்கின்றனர்.

மற்றவர்களை விட வித்தியாசமாக தோற்றமளிக்க வேண்டும் என்று விரும்பிய ஃப்ரீஜா, ஒரு ஏலியன் போல தன்னை உருமாற்றிக் கொண்டுள்ளார். தலைமுடியை நீல நிறத்தில் கலர் செய்தும் அதற்கு ஏற்ப உடை அணிந்தும் ஒரு ஏலியன் போலவே காட்சியளிக்கிறார்.

சிறு வயதில் இருந்தே மேக்கப் செய்துக்கொள்வதில் அதிக ஈடுபாடு கொண்ட இவர், 17 வயதில் தனது தோற்றத்தில் மாற்றத்தை உணர ஆரம்பித்துள்ளார். இவரை பார்க்கும் மக்கள் சிலர், தீய சக்தி என கருதி தேவாலயங்களில் உள்ள புனித நீரை இவர் மீது தெளித்து வருகின்றனர். மேலும் சிலர் இவரை அமானுஷ்ய சக்தி என்றும், சூனியக்காரி என்றும் கருதி மாந்திரீகங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

<a href=https://youtube.com/embed/LymacmDiFvw?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/LymacmDiFvw/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px none; overflow: hidden;" width="640" height="360" frameborder="0">

இது குறித்து ஃப்ரீஜா ஃபோரியா கூறுகையில், பள்ளி நாட்களில் இருந்தே வித்தியாசமான உடைகள் அணிவது, அமானுஷமான பாடல்கள், இசைகள் கேட்பது  தனக்கு மிகவும் என்று  தெரிவித்துள்ளார். மேலும் தனது வித்தியாசமான தோற்றித்திற்காக பாரிஸ்ல் உள்ள நேட்ரோ டேமில் அனுமதி மறுக்கப்பட்டது தனக்கு மிகுந்த மன வேதனை அளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.