செல்ஃபி எடுத்த இளம்பெண்.. 170 அடி உயரமுள்ள மலை உச்சியிலிருந்து கீழே விழுந்து பலி!

 

ஜார்ஜியாவில், ரஷ்யாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், செல்ஃபி எடுக்கும்போது 170 அடி உயரமுள்ள மலை உச்சியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு ரஷ்யாவின் கருங்கடலை ஒட்டி, சோச்சி ஆற்றின் மீது அமைந்துள்ளது. இந்த நகரில் அழகுக்கலை நிபுணராக பணியாற்றி வந்தவர் இனெஸ்ஸா பொலென்கோ (39). இவர், சமீபத்தில் ஜார்ஜியா நாட்டுக்கு சுற்றுலா சென்றிருந்தார்.

கருங்கடலுக்கு அருகே அமைந்துள்ள மலை ஒன்றில் ஏறிய இனெஸ்ஸா, மலையுச்சியில் நின்று செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார். அப்போது கால் தடுக்கி, 170 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற, பிரபல சுற்றுலாத்தலமான சோச்சி நகரிலேயே, இன்று அவருக்கு இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது. போலீசார் இந்த துயர சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

2008-ம் ஆண்டுக்குப் பிறகு, உலகம் முழுவதும் இதுவரை சுமார் 400 பேர் இதுபோல செல்பி எடுக்க முயலும்போது விபத்துக்குள்ளாகியுள்ளார்கள் அல்லது உயிரிழந்துள்ளார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் 20 வயதுகளிலிருக்கும் இளம்பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.