நிக்கல் தொழிற்சாலையில் பயங்கர வெடிவிபத்து.. 13 பேர் பரிதாப பலி

 

இந்தோனேசியாவில் நிக்கல் உருக்காலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மின்சார வாகன பேட்டரி உற்பத்தியில் நிக்கல் முக்கிய மூலப்பொருளாக உள்ளது.  நிக்கல் கனிம உற்பத்தியில் இந்தோனேசியா முதல் இடத்தில் உள்ளது. இதனிடையே, இந்நாட்டின் சுலவிசி தீவில் சீன நிறுவனத்தின் நிதி உதவியில் நிக்கல் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்த தொழிற்சாலையில் நேற்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்த 13 ஊழியர்கள் உயிரிழந்தனர். இவர்களில் 9 பேர் இந்தோனேசியர்கள், 4 பேர் சீனர்கள். மேலும், 38 பேர் படுகாயமடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இவர்களில் சிலரின் நிலைமை கவலைகிடமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.