தங்கைகளை கொன்ற 15 வயது சிறுமி.. தாய்க்கு அனுப்பிய குறுஞ்செய்தி.. வெளியான அதிர்ச்சி தகவல்

 

ரஷ்யாவில் 13 வயது சிறுமி ஒருவர் தனது 2 தங்கைகள் கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு, தன் தாய்க்கு ஒரு குறுஞ்செய்தியும் அனுப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவை சேர்ந்த யூரி - ஐரினா தம்பதிக்கு 5 குழந்தைகள் இருந்தனர். 2, 5, 10, 13 மற்றும் 18 வயதுள்ள அந்த குழந்தைகளில், சிறு பிள்ளைகள் இருவரை அவர்களுடைய 13 வயது சகோதரி கவனித்து கொண்டிருந்திருக்கிறாள். அவர்களில் அந்த 10 வயது சிறுமி வீட்டுக்கு வரும்போது, தன் 2 மற்றும் 5 வயதுடைய தங்கைகள் இருவரும் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறாள்.

விசயம் என்னவென்றால், அந்த நேரத்தில் அவர்களுடைய தாயும், அவரது காதலரும் காவல் நிலையம் சென்றுள்ளார்கள். தன் காதலர் தனக்கு துரோகம் செய்துவிட்டதாக ஐரினா புகார் அளித்துக் கொண்டிருக்கும் நேரத்தில்தான் தன் தங்கைகளைக் கொன்றிருக்கிறாள் அந்த 13 வயது சிறுமி. அவர்களுடைய உடலில் கடிபட்ட காயங்களும் உள்ளன.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைத்து வந்த தாய் ஐரினா என்ன நடந்தது என அந்த 13 வயது சிறுமியிடம் கேட்க, அவளோ, ‘ஹா ஹா ஹா, நான்தான் அவர்களைக் கொன்றேன்’ என குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறாள். தன் பிள்ளைகள் கொல்லப்பட்டதை அறிந்த பிள்ளைகளின் தந்தையான யூரி, வீட்டுக்குள் சென்று பிள்ளைகள் உயிரிழந்து கிடப்பதைக் கண்ட அதிர்ச்சியில் வீட்டை விட்டு வெளியே ஓடிவந்திருக்கிறார்.

வெகு நேரமாக பேச்சுவராமல் அவர் அதிர்ச்சியில் அமர்ந்திருந்ததாக அக்கம் பக்கத்தவர்கள் தெரிவித்துள்ளார்கள். ரஷ்யாவைப் பொருத்தவரை, பல நாடுகளைப்போலவே, அந்த சிறுமிக்கு 13 வயதே ஆவதால், அவள் மீது எந்த குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.