கொரோனா தொற்றில் இருந்து மீண்டார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!!

 

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் 2019-ம் ஆண்டு இறுதியில் பரவி தொடங்கிய கொரோனா வைரஸ், தொடர்ந்து வீரியத்துடன் பரவி வருகிறது. இதனால், கொரோனா வழிகாட்டுதல்களை உலக நாடுகள் பின்பற்றுவதை தவிர்க்க கூடாது என உலக சுகாதார அமைப்பும் வலியுறுத்தி வருகிறது.

சாமானிய மக்கள் முதல் பெரும் உலக தலைவர்கள் வரை கொரோனா பாதிப்புக்கு ஆட்படாதவர்களே இல்லை எனலாம். அந்த அளவுக்கும் பரவும் தன்மையுடன் தொற்று பரவி வருகிறது.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோபைடனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கடந்த வாரம் கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். ஜோபைடனை டாக்டர்கள் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் அதிபர் ஜோ பைடன் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளார். இதுகுறித்து அதிபரின் டாக்டர் கெவின் ஓகானர் கூறுகையில், “அதிபர் ஜோபைடனுக்கு நேற்று மாலை, இன்று காலை நடத்தப்பட்ட ஆன்டிஜென் சோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று முடிவு வந்துள்ளது.

இதையடுத்து அதிபர் தனது கடுமையான தனிமைப்படுத்தலை முடிவுக்கு கொண்டு வருவார். அவருக்கு காய்ச்சல் இல்லை. கொரோனா அறிகுறிகள் முற்றிலும் நீங்கிவிட்டன” என்றார்.