விமானம் தரையிறங்கிய போது திடீர் தீ விபத்து... உயிர் தப்பிய 126 பயணிகள்!

 

டொமினிக்கன் குடியரசில் இருந்து புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி சர்வதேச விமான நிலையத்திற்கு ரெட் ஏர் பயணிகள் விமானம் ஒன்று நேற்று மாலை தரை இறங்கியது. அப்போது விமானத்தின் முன்பக்க லேண்டிங் கியர் திடீரென பழுது ஏற்பட்டதால் விமானம் ஓடுதளத்தில் லேசாக மோதி தீப்பிடித்து எரிந்தது.

இதையடுத்து இதுகுறித்த தகவல் அறிந்து விரைந்து வந்த விமான நிலைய தீயணைப்புப் படையினர், ரசாயன நுரையை பீய்ச்சி அடித்து தீயை அணைத்ததால் விமானத்தில் இருந்த 126 பயணிகளும் உயிர் தப்பினர்.

இந்த விபத்தில் 3 பயணிகளுக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மற்ற பயணிகள் அனைவரும் பேருந்து மூலம் விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


இந்த நிலையில், எதனால் திடீரென விமானத்தின் லேண்டிங் கியர் பழுதானது என்பது குறித்து மியாமி விமான நிலைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மியாமி விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் ஒன்று தரையிறங்கும்போது தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.