சடலத்தை போல் துர்நாற்றம் வீசக்கூடிய கார்ப்ஸ் மலர்.. அமெரிக்காவில் முதல் முறையாக பூத்துள்ளது!!

 

சடலத்தை போல் துர்நாற்றம் வீசக்கூடிய கார்ப்ஸ் மலர் அமெரிக்காவில் 7 ஆண்டுகளில் முதல் முறையாக பூத்துள்ளது.

இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் உள்ள மழைக்காடுகளில் வளரக்கூடிய இந்த கார்ப்ஸ் மலர், உலகிலேயே மிகவும் துர்நாற்றம் வீசக்கூடிய மலராக கருதப்படுகிறது.

அழிவின் விளிம்பில் உள்ள இந்தச் செடி, மிச்சிகன் மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்தின் 2வது தளத்தில் வளர்க்கப்பட்டு வருகிறது. முழு வளர்ச்சி அடைந்து, மலர்கள் பூக்க 10 ஆண்டுகள் வரை ஆகும் என கூறப்படும் நிலையில் இந்த செடி 7 ஆண்டுகளிலேயே பூத்துள்ளது.

மொட்டு மலராக ஓன்றரை நாள் தேவைப்படுவதால் அந்த காட்சிகள் டைம்லேப்ஸ் கேமரா மூலம் படமாக்கப்பட்டுள்ளது. கடும் துர்நாற்றம் வீசிய போதும் அதிசய மலரை காண பலர் ஆர்வமுடன் வந்தனர்.