கைலாசவுக்கு அமெரிக்கா அங்கிகாரம்... இருநாடுகள் இடையே ஒப்பந்தம்!!

 
பாலியல் வழக்கு, கடத்தல், மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் சாமியார் நித்யானந்தா, 2019-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து தலைமறைவானார். இந்துக்களுக்கு என தனி கைலாசா நாடு ஒன்றை உருவாக்கிவிட்டதாக பிரகடனபடுத்திய அவரை போலீசார் தேடி வரும் நிலையில், அவர் எங்கிருக்கிறார் என இதுவரை கண்டறிய முடியவில்லை.
அவ்வப்போது பக்தர்களுக்கு சத்சங்கம் என்ற பெயரில் ஆன்மிக சொற்பொழிவுகளை சமூக வலைதளங்களின் வாயிலாக ஆற்றி வந்த அவர், கடந்த சில வாரங்களாக செயல்படாமல் இருந்தார். இதனால் அவருக்கு கடுமையான உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், சிலர் அவர் மரணமடைந்து விட்டதாகவும் பீதி கிளப்பி வந்தனர். அவற்றிற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் அவரே கைப்பட எழுதிய கடிதம் ஒன்றினை வெளியிட்டார்.
‘கைலாசா’ என்ற நாடு எங்கே இருக்கிறது? என நெட்டிசன்கள் சல்லடை போட்டு தேடிக்கொண்டு இருக்கும்போதே, கைலாசா நாட்டை ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்து உள்ளதாக, அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் கடந்த சில மாதங்களாக பதிவிட்டு வருகின்றனர்.
சமீபத்தில் நியூயார்க்கில் நடந்த ஐ.நா 77வது பொதுச்சபை கூட்டத்தில் கைலாசா சார்பில் ஐ.நாவுக்கான தூதராக நித்யானந்தா சீடர் விஜயபிரியா பங்கேற்றதாக தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த பரபரப்பின் சுவடு மறைவதற்கு முன்பாக, சாமியார் நித்யானந்தாவின் கைலாசா நாட்டை இறையான்மை பெற்ற நாடாக அமெரிக்காவின் நெவார்க் நகர நிர்வாகம் அங்கீகரித்து இருப்பது அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக இரு தரப்பு மக்களின் மேம்பாட்டுக்கு தேவையான வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாக கையெழுத்து ஆகியுள்ளது. நியூ ஜெர்சி மாகாணத்தின் நிவார்க் நகரம் சார்பில், மேயர் மற்றும் கைலாசா நாட்டின் தூதர் விஜயபிரியா நித்யானந்தா ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்ததில், கையெழுத்து போட்டுள்ளனர். இந்த விவகாரம் தமிழகம் மட்டும் இல்லாமல் உலக அளவில் பேசு பொருளாக மாறி உள்ளது. மேலும், கைலாசா ஓரு நாடாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளதால் ஐ.நாவில் நித்தியானந்தா கொடியும் பறக்குமா? என்ற கேளிவியும் எழுந்து உள்ளது.