பேருந்தின் மீது எரிப்பொருள் டேங்கர் லாரி மோதி கோர விபத்து! 18 பேர் பலி!!

 

வட அமெரிக்க நாடான மெக்சிக்கோவின் ஹிடால்கோ நகரில் இருந்து மான்டேரியை நோக்கி பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது தமௌலிபாஸ் அருகே எரிபொருள் ஏற்றிக்கொண்டு வந்த டேங்கர் லாரி ஒன்று பேருந்தின் மீது மோதியது.

இந்த விபத்தில் டேங்கரில் இருந்த எரிபொருள் வெடித்து தீ பற்றியது. இதனால் டேங்கர் லாரியும், பேருந்தும் தீ பிடித்து முழுவதுமாக எரிந்து நாசமானது. இதன் காரணமாக பேருந்தில் பயணித்த 18 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். எனினும், டேங்கர் லாரி டிரைவர் உயிர்பிழைத்தாக கூறப்படுகிறது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தமௌலிபாஸ் தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து குறித்து போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், இந்த விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறியதாவது, இந்த விபத்து மான்டேரி நெடுஞ்சாலையில் அதிகாலை நடந்துள்ளது. லாரி ஓட்டுநர் உயிர் பிழைத்துள்ளார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. பேருந்தில் பயணித்த மொத்த நபர்களின் எண்ணிக்கை 20-க்கும் அதிகமாக உள்ளது. அதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும். இந்த லாரி இரட்டை கொள்கலனை கொண்டாதால் உந்துவிசை காரணமாக கட்டுப்பாட்டை இழந்து பேருந்துமீது மோதியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.