96 வயதுதான இங்கிலாந்து ராணி உடல்நிலை கவலைக்கிடம்; உலகத்தலைவர்கள் பிரார்த்தனை..!

 

இங்கிலாந்து மகாராணி எலிசெபத்திற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பது இங்கிலாந்து நாட்டினர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற இயற்பெயர் கொண்ட ராணி இரண்டாம் எலிசபெத் 1952-ம் ஆண்டு முதல் 70 ஆண்டுகளாக இங்கிலாந்தின் மகாராணியாக பொறுப்பு வகித்து வருகிறார். தற்பொழுது 96 வயதாகும் இங்கிலாந்து மகாராணி ராணி எலிசெபத், இங்கிலாந்து நாட்டில் உள்ள பக்கிங்காம் மாளிகையில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் இவருக்கு திடீரென இன்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, மகாராணியின் அதிகாரப்பூர்வன மருத்துவக்குழுவினர் ராணிக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலையை மருத்துவக்குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். வேல்ஸ் இளவரசர், கமிலா மற்றும் கேம்பிரிட்ஜ் பிரபு ஆகியோர் 96 வயதான ராணியுடன் உள்ளனர்.

இங்கிலாந்து மகாராணி எலிசெபத்திற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பது இங்கிலாந்து நாட்டினர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் விரைவில் நலம் பெற வேண்டிய உலகத் தலைவர்கள் பிரார்த்தனை தெரிவிப்பதாக கூறியுள்ளனர். ராணி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் உடல் நலம் பாதிக்கப்பட்டு, நடக்கவும் நிற்கவும் சிரமப்பட்டார்.


இதுகுறித்து புதிய பிரதமர் லிஸ் டிரஸ் ட்விட்டரில், இந்த மதிய உணவு நேரத்தில் பக்கிங்காம் அரண்மனையில் இருந்து வரும் செய்தியால் முழு நாடும் ஆழ்ந்த கவலையில் மூழுகி உள்ளது என குறிப்பிட்டுள்ளார். திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ள இங்கிலாந்து ராணி எலிசபெத் நலம் பெற வேண்டி பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.