38 விமானங்கள்.. 300 கார்கள்.. ஆண்டுக்கு செலவு மட்டுமே ரூ. 524 கோடி.. உலகின் பணக்கார மன்னரின் சொகுசு வாழ்க்கை!

 

உலகின் பணக்கார மன்னரான தாய்லாந்து மன்னரின் சொத்து மதிப்பு 40 பில்லியன் டாலருக்கும் அதிகமாக இருக்கும் என பைனான்சியல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு அரச குடும்பங்களைப் பற்றி குறிப்பிடும் போதெல்லாம், பிரிட்டனின் அரச குடும்பம், புருனே சுல்தான், சவுதியின் அரச குடும்பம் உட்பட பல அரச குடும்பங்கள் குறிப்பிடப்படுகின்றன. இந்த அத்தியாயத்தில், உலகின் மற்றொரு பணக்கார மன்னரைப் பற்றி தெரியுமா? அவர் தான் தாய்லாந்து மன்னர் மஹா வஜிரலோங்கோர்ன். இவர் கிங் பத்தாவது ராமா என்றும் அழைக்கப்படுகிறார்.

பைனான்சியல் டைம்ஸின் கூற்றுப்படி, தாய்லாந்தின் அரச குடும்பத்தின் சொத்து மதிப்பு 40 பில்லியன் டாலருக்கும் அதிகமாக இருக்கும், அதாவது 3.2 லட்சம் கோடிகள். அதனால்தான் அவர் உலகின் பணக்கார மன்னர்களில் ஒருவராக கருதப்படுகிறார். தாய்லாந்தின் மஹா வஜிரலோங்கோர்னின் மிகப்பெரிய சொத்து நாடு முழுவதும் பரவியிருக்கிறது. தாய்லாந்தில் 6,560 ஹெக்டேர் (16,210 ஏக்கர்) நிலம் உள்ளது. இந்த மன்னரு்ககு தலைநகர் பாங்காக்கில் 17,000 ஒப்பந்தங்கள் உட்பட நாடு முழுவதும் 40,000 வாடகை ஒப்பந்தங்கள் உள்ளன.  இந்த நிலங்களில் வணிக வளாகங்கள், ஓட்டல்கள் மற்றும் பல அரசு கட்டடங்கள் உள்ளன.

தாய்லாந்தின் இரண்டாவது பெரிய வங்கியான சியாம் கமர்ஷியல் வங்கியில் மன்னர் மஹா வஜிரலோங்கோர்ன் 23 சதவீத பங்குகளையும், நாட்டின் மிகப்பெரிய தொழில்துறை நிறுவனமான சியாம் சிமெண்ட் குழுமத்தில் 33.3 சதவீத பங்குகளையும் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

தாய்லாந்து மன்னரின் கிரீடத்தில் உள்ள ரத்தினங்களில் ஒன்று 545.67 காரட் பழுப்பு நிற கோல்டன் ஜூபிலி வைரமாகும். இது உலகின் மிகப்பெரிய மற்றும் விலையுயர்ந்த வைரம் என்று கூறப்படுகிறது. இதன் மதிப்பு ரூ.98 கோடி வரை இருக்கும் என வைர ஆணையம் மதிப்பிட்டுள்ளது. 38 விமானங்கள், 300-க்கும் மேற்பட்ட கார்கள் வைத்திருப்பதால் தாய்லாந்து மன்னருக்கு பொழுது போக்கிற்கும் குறைவில்லை.

பைனான்சியல் டைம்ஸின் கூற்றுப்படி, தாய்லாந்து மன்னரிடம் 21 ஹெலிகாப்டர்கள் உட்பட 38 விமானங்கள் உள்ளன. இதில் போயிங், ஏர்பஸ் விமானம் மற்றும் சுகோய் சூப்பர்ஜெட் உள்ளிட்டவை அடங்கும். விமானத்தின் எரிபொருள் மற்றும் பராமரிப்புக்காக ஆண்டுக்கு ரூ.524 கோடி செலவிடப்படுகிறது என்பது சிறப்பு.

அதே நேரத்தில், தாய்லாந்து மன்னருக்கு கார்களின் பெரிய கான்வாய் உள்ளது, அதில் லிமோசின், மெர்சிடிஸ் பென்ஸ் உட்பட 300 க்கும் மேற்பட்ட விலையுயர்ந்த கார்கள் உள்ளன. இது தவிர, ராயல் படகு அரச குடும்பத்தின் பழமையான அடையாளமாகும். அரச படகுடன் 52 படகுகள் கொண்ட கடற்படை உள்ளது. அனைத்து படகுகளிலும் தங்க வேலைப்பாடுகள் உள்ளன. அவை சுபனாஹோங் என்று அழைக்கப்படுகின்றன.

கிராண்ட் பேலஸ் என்பது தாய்லாந்து மன்னரின் அரச மாளிகையாகும், இது 23,51,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. இது 1782-ல் முடிக்கப்பட்டது. ஆனால், மன்னர் அரச மாளிகையில் வசிக்கவில்லை. இந்த அரண்மனையில் பல அரசு அலுவலகங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் உள்ளன. இதனால் தான் இவரும் உலகின் பணக்கார மன்னர்களில் ஒருவராக உள்ளார்.