கிரீஸ் நாட்டில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. 26 பேர் பலி!

 

கிரீஸ் நாட்டில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் சிக்கி இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கிரீஸ் நாட்டின் ஏதேன்ஸ் நகரில் இருந்து திஸ்லனொய்கி நகருக்கு இன்று 350 பயணிகளுடன் ரயில் சென்றுகொண்டிருந்தது. லரிசா நகரின் தெம்பி பகுதியில் பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தபோது அதே தண்டவாளத்தில் வேகமாக வந்த சரக்கு ரயில் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. 

இரு ரயில்களும் நேருக்கு நேர் மோதியதில் பயணிகள் ரயிலின் சில பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து கவிழ்ந்து தீ பற்றி எரிந்தது. இந்த கோர விபத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 85 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மோசமான இந்த விபத்துக்கு காரணம் தொடர்பில் இதுவரை தகவல் ஏதும் வெளியாகவில்லை.

இந்த விபத்து குறித்து அதிகாரிகள் கூறுகையில், ஏதென்ஸுக்கு வடக்கே சுமார் 235 மைல் தொலைவில் உள்ள டெம்பே என்ற பகுதியிலேயே நள்ளிரவில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது. சரக்கு ரயில் மற்றும் பயணிகள் ரயில் மோதியதில் குறைந்தது மூன்று பெட்டிகள் தீப்பிடித்து எரிந்துள்ளது.

இந்த விபத்தில், 26 பேர் உயிரிழந்துள்ளனர். சிறார்கள் உட்பட மொத்தம் 85 பேர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இதில் சுமார் 25 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், பயணிகள் ரயிலில் 350 பயணிகளுக்கும் மேல் சம்பவத்தின் போது பயணித்துள்ளனர் என்று கூறியுள்ளார்.