புளோரிடாவில் 19 அடி நீள பர்மா மலைப்பாம்பு.. கச்சிதமாக பிடித்த 22 வயது இளைஞர்! பரபரப்பு வீடியோ

 

அமெரிக்காவில் உலகின் மிக நீளமான மலைப்பாம்பை 22 வயது இளைஞர் பிடித்துள்ளார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் மேற்கு பகுதியில் உள்ள பிக் சைப்ரஸ் நேஷனல் ப்ரிசர்வ் பகுதியில் கடந்த திங்கட்கிழமை ஜேக் வாலேரி (22) என்ற இளைஞரால் மிக நீளமான மலைப்பாமபு ஒன்று பிடிக்கப்பட்டது. இவர், தனது சொந்த ஊரான நேப்பிள்ஸில் உள்ள தென்மேற்கு புளோரிடாவின் கன்சர்வேன்சிக்கு மலைப்பாம்பை கொண்டு வந்ததாக கன்சர்வேன்சி தெரிவித்துள்ளது.

அங்குள்ள அதிகாரிகள் பாம்பை 19 அடி நீளம் மற்றும் 125 பவுண்டுகள் என கணக்கிட்டுள்ளனர், மேலும் அந்த மலைப்பாம்பு தான் இதுவரையில் மீக நீளமானதாகக் கருதப்படுகிறது. இதற்கு முன், புளோரிடாவில் மிகப்பெரிய பர்மா மலைப்பாம்பு அக்டோபர் 2020-ல் பிடிக்கப்பட்டது. அதன் அடி 18 மற்றும் ஒன்பது அங்குலமாக இருந்தது.

இது தொடர்பான வீடியோவை இன்ஸ்டாகிராமில் ஜேக் வாலேரி பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், மலைப்பாம்பு அதன் வாலால் சாலையில் இழுப்பதை பார்க்கலாம். சில நொடிகளுக்குப் பிறகு, 22 வயது இளைஞனுக்கு பாம்பை பிடிக்க உதவ பலர் சேர்ந்து கொள்கிறார்கள்.

தென்மேற்கு புளோரிடாவின் கன்சர்வேன்சியிடம் வாலேரி கூறுகையில், “நாங்கள் பாம்பை அதிகாரப்பூர்வமாக அளந்து ஆவணப்படுத்த கன்சர்வேன்சிக்கு கொண்டு வந்தோம். இந்த கண்டுபிடிப்பை அறிவியலுக்கு வழங்க விரும்பினோம். சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் அதை முடிந்தவரை பாதுகாக்க முயற்சி செய்ய வேண்டும்” என்றார்.

ஊர்வனவற்றை பிடிப்பது ஒரு கனவாக இருந்தபோதிலும், அதன் அளவைக் கருத்தில் கொண்டு தான் குழப்பம் அடைந்ததாக அந்த இளைஞர் கூறினார். அது நடக்கும் என்று எனக்குத் தெரியாது. கடந்த ஆண்டு நானும் எனது உறவினரும் கிட்டத்தட்ட 18 அடி நீளமுள்ள ஒரு பாம்பை பிடித்தோம், அந்த அளவிலான பாம்பை நாங்கள் கையாள முடியும் என்பதை நாங்கள் உணர்ந்தோம். முதலில் நான் வாலைப் பிடித்துக் கொண்டேன். பின்னர் எனது நண்பர்களில் ஒருவர் உதவினார் என்றார்.

A post shared by Glades Boys Python Adventures (@gladesboys)

புளோரிடா மீன் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு ஆணையத்தின் கூற்றுப்படி, பர்மா மலைப்பாம்புகள் உலகின் மிகப்பெரிய பாம்புகளில் ஒன்றாகும். தங்கள் உணவைப் பிடித்து உண்ணும் விதத்திற்காக அவை மிகவும் பிரபலமானது. வேட்டையாடுபவர்களுக்கும் குடியிருப்பாளர்களுக்கும் அவற்றைக் கொல்ல அனுமதி தேவையில்லை. இருப்பினும், ஊர்வன, கொடுமைக்கு எதிரான சட்டங்களால் பாதுகாக்கப்படுகின்றன, வேட்டையாடுபவர்கள் பாம்புகளை மனிதாபிமானத்துடன் கொல்ல வேண்டும். இந்த மலைப்பாம்பு புளோரிடாவின் வனவிலங்குகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.