சூப்பில் விஷம் கலந்த 16 வயது காதலி.. காதலனுடன் உட்பட 5 பேர் பரிதாப பலி!
நைஜீரியாவில் 16 வயது சிறுமி தனது முன்னாள் காதலனுக்கு சூப்பில் விஷம் வைத்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நைஜீரியாவின் எடோ மாகாணத்தை சேர்ந்த 16 வயது பெண், பிரேக் அப் செய்த காதலனை பழி வாங்க வேண்டும் என்று நினைத்து அவருக்கு மிளகு சூப்பில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். ஆனால் சூப்பை அவரது முன்னாள் காதலன் தனது நண்பர்களுடன் பகிர்ந்து குடித்ததால் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பாக உள்ளூர் போலீசார் சிறுமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எடோ மாநில போலீஸ் கமாண்ட் செய்தித் தொடர்பாளர் மோசஸ் யாமு கூறுகையில், இந்த மரணங்கள் எப்படி நிகழ்ந்தன என்பதை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இருப்பினும், இதற்குப் பின்னால் உள்ள உறுதியான காரணங்கள் தேடப்படுகின்றன.
மேலும், இம்மானுவேல் எலோஜி (19), அடா சாமுவேல் (16) சகோதரர்கள் சாமுவேல் அயெக்வாலோ மற்றும் ஜெஃப்ரி அயெக்வாலோ மற்றும் நூருதீன் ஆகிய 5 பேரை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
அதே சமயம் சிறுமியின் தரப்பிலும் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த 16 வயது சிறுமி அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார். சம்பவத்தன்று தான் ஊரில் இல்லை என்றும், ஜெனரேட்டரின் புகையால் இந்த ஐந்து பேரும் இறந்ததாகவும் கூறுகிறார்.
அதேநேரம் முன்னாள் காதலனின் தந்தை போலீசாரிடம் கூறிய சில விஷயங்கள் சிறுமி மீதான சந்தேகத்தை அதிகப்படுத்தி உள்ளது. சிறிது காலத்திற்கு முன்பு சிறுவனின் புதிய காதலி தனது முன்னாள் காதலியின் முன் வந்ததாக தந்தை கூறுகிறார். அப்போது அந்த வாலிபரின் புதிய காதலியின் ஆடைகளை முன்னாள் காதலி கிழித்துள்ளார். இதனால் இந்த சம்பவத்தில் சிறுமிக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் அதிகரித்துள்ளது.